தனுஷ்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு
வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக நடிகர் தனுஷ்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இரு தரப்புக்கு இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-13 16:12 GMT
நடிகர் தனுஷ்
போயஸ் கார்டனில் தான் வசித்து வந்த வாடகை வீட்டை தனுஷ் வாங்கி விட்டதால் காலி செய்யுமாறு வற்புறுத்தியதாக அஜய் குமார் லுனாவத் என்பவர் மனு அளித்திருந்தார். முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி காலி செய்ய சொன்னது சட்ட விரோதம் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரருக்கும், தங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டது. கடந்த 31 ஆம் தேதி வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்று தனுஷ் தரப்பு தெரிவித்துள்ளது.