இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவு

சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயும், பிற நகரங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கவேண்டும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-13 16:16 GMT
வழக்கறிஞர்

சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயும், பிற நகரங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கவேண்டும் என்று அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உதவி தொகையை எந்த பாரபட்சமும் காட்டாமல் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தலை நீதிபதிகள் வழங்கினர். வழக்கறிஞர்கள் நல நிதிச் சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்த கோரி புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஃபரிதா பேகம் வழக்கு தொடர்ந்தார்.

Tags:    

Similar News