விழுப்புரத்தில் லாக்கப் டெத்? - மீண்டும் பரிசோதனை
விழுப்புரம் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்ததாக கூறப்படும் ராஜா என்பவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று பலியான ராஜாவின் மனைவி அஞ்சு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 15:15 GMT
கோப்பு படம்
விழுப்புரம் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்ததாக கூறப்படும் ராஜா என்பவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று பலியான ராஜாவின் மனைவி அஞ்சு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மற்றும் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவர்களை கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல் மரணம் குறித்து விசாரணை நடத்தவும் நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.