தினத்தந்தி திரு.சண்முகநாதன் மறைவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

மூத்தபத்திரிக்கையாளர் தினதந்தி சண்முகநாதன் மறைவிற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.;

Update: 2024-05-04 01:38 GMT
தினத்தந்தி  திரு.சண்முகநாதன் மறைவிற்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

மூத்தபத்திரிகையாளர் சண்முகநாதன்

  • whatsapp icon

சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிடுள்ள அறிக்கையில் தினத்தந்தி நாளிதழில் 70 ஆண்டுகள் தன்னை இதழியல் பணியில் இணைத்துக் கொண்ட மூத்த பத்திரிகையாளரும், 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான பெரியவர் திரு. ஐ. சண்முகநாதன் அவர்கள் இன்று (03-05-2024) வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தினத்தந்தி குழுமம் வெளியிட்டு, லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் ஆசிரியர். “ஒரு தமிழன் பார்வையில் 20ம் நூற்றாண்டு வரலாறு”, “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்” வரை முதலான பல்வேறு நூல்களையும் படைத்துள்ள பெரியவர் திரு. சண்முகநாதன் அவர்களது மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருடனும் துயரத்தில் பங்கேற்கிறோம்.

Tags:    

Similar News