சென்னை பெட்ரோலிய கார்பரேஷன் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம்
கச்சா எண்ணெய் கசிந்த விவகாரத்தில் சென்னை பெட்ரோலிய கார்பரேஷன் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2024-05-23 02:18 GMT
நாகப்பட்டினம் நாகூர் பட்டினச்சேரியில் சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கு (CPCL) சொந்தமான குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்த விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணை செய்தது. அதில் சென்னை பெட்ரோலிய கார்பரேஷன் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அபராத தொகையை செலுத்தவும் உத்தரவு.