சென்னை : பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
சென்னை பாண்டி பஜாரில்நடந்த தேர்தல் பிரசார வாகன பேரணியின் போது பிரதமர் மோடியை பொதுமக்கள், தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.;
Update: 2024-04-10 02:32 GMT
பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை பாண்டிபஜாரில் உள்ள தியாகராய சாலையில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். ஒளிரக்கூடிய தாமரை சின்னத்தை கையில் ஏந்தி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பட்டு வேட்டி சட்டை அணிந்து வாகனப் பேரணியில் ஈடுபட்டார் சாலை இருபுறமும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பலர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து சாலை பேரணி ஈடுபட்டார். பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்துடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.