சென்னை - தூத்துக்குடி முன்பதிவில்லா பொங்கல் சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே 22 இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளுடன் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2024-01-11 08:42 GMT

மதுரை சந்திப்பு 

22 இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவில்லா பொங்கல் சிறப்பு ரயில்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 

தாம்பரம் - தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06001) ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை 07.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - தாம்பரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06002) ஜனவரி 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் காலை 06.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்களில் 22 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Tags:    

Similar News