சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மண்டலம் மூன்றாமிடம்

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.30 சதவீத தேர்ச்சி பெற்று சென்னை மண்டலம் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

Update: 2024-05-14 02:56 GMT

  சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.30 சதவீத தேர்ச்சி பெற்று சென்னை மண்டலம் மூன்றாமிடம் பிடித்துள்ளது. 

சி பி எஸ் சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது, ஒட்டுமொத்தமாக 93.60 % தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.48% அதிகம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் சென்னை மண்டலம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது 99.30% 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 20 லட்சத்தி 95 ஆயிரத்து 467 மாணவர்கள் தேர்ச்சி. ஒட்டுமொத்தமாக அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற ஆண்கள் 92.71% பெண்கள் 94.75% மாற்று பாலினத்தவர் 91.30%. இந்த ஆண்டு ஆண்களை விட பெண்கள் 2.04% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மொத்தம் 86.72 பேர் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 83.95 % பேர் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலம் 99.30 சதவீதத்துடன் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் 99.75 சதவீதத்துடன் முதல் இடமும், விஜயவாடா 99.60 சதவீதத்துடன் இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.

Tags:    

Similar News