சிதம்பரம் நடராஜர் கோவில் பிரம்மோற்சவம் - உயர்நீதிமன்றம் இறுதி கெடு

சிதம்பரம் நடராஜர் கோவில் பிரம்மோற்சவத்தை நடத்தக்கோரிய வழக்கில் பொது தீட்சிதர் குழு வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

Update: 2024-03-26 01:42 GMT

பைல் படம் 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாளுக்கு கடந்த 50 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள பிரம்மோற்சவத்தை நடத்தக்கோரிய வழக்கில் பொது தீட்சிதர் குழு ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் பொது தீட்சிதர்களின் பாரபட்ச போக்கு காரணமாக கடந்த 50 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை எனக் கூறி, சிதம்பரத்தைச் சேர்ந்த எம்.என்.ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா,நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத்துறை பிரமோட்சவம் நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும்,மே 20,21 தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது என் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.கனகராஜ் தெரிவித்தார்.

பிரம்மோற்சவம் நடத்தக்கூடாது என்று சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது அது குறித்து  பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என பொதுதீட்சிதர் குழு தரப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 25 தேதிக்குள் பதிலளிக்க வேண்டும், இது கடைசி வாய்ப்பு என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News