பட்டாசு ஆலை வெடி உயிர் இழந்தவருக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடி உயிர் இழந்தவருக்கு முதல்வர் நிவாரணம் அறிவிக்கப்படுள்ளது.

Update: 2023-12-15 12:33 GMT

முதல்வர் ஸ்டாலின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே , பனையடிபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை , பனையடிப்பட்டி கிராமம், கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது 36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News