திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இறுதி ஆகாத நிலையில் பேச்சுவார்த்தை குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
Update: 2024-03-07 07:16 GMT
திமுக கூட்டணியில் காங்கிரஸ்,விசிக, மதிமுக-வுடன் தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில் அறிவாலயத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,திமுக தொகுதி பங்கீடு குழுவில் இடம்பெற்றுள்ள டி.ஆர்.பாலு, கே.என்.நேரு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.