தூத்துக்குடியில் மின்சார கார் நிறுவனம் - துவக்கி வைக்கும் முதல்வர்

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தை வரும் 25ஆம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார் என்று சிப்காட் நிா்வாக இயக்குநா் செந்தில்ராஜ் தெரிவித்தார்.;

Update: 2024-02-14 16:31 GMT

செய்தியாளர் சந்திப்பு 

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், புரிந்துணா்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்கு கொண்டுவர தொழிற்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்நிறுவனம் அமைக்கப்படுவதற்கான இடங்களை சிப்காட் நிா்வாக இயக்குநா் செந்தில்ராஜ் தலைமையிலான குழுவினா் நேற்று ஆய்வு செய்தனா்.

Advertisement

அதைத் தொடா்ந்து, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னா், சிப்காட் நிா்வாக இயக்குநா் செந்தில்ராஜ் செய்தியாளா்களிடம் கூறும்போது, சில்லாநத்தம் சிப்காட் தொழில்பூங்காவில் 408 ஏக்கரில் அமையவுள்ள வின் ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிகளைத் தொடக்கிவைக்கிறாா். இது தொடா்பாக அரசு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றாா். கூட்டத்தில், தொழில் வழிகாட்டி நிறுவன நிா்வாக இயக்குநா் வே. விஷ்ணு, சிப்காட் செயற்பொறியாளா் தம்பிரான்தோழன், திட்ட அலுவலா் ஜோன்ஸ் மேரி சகாயராணி, மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியா் பிரபு, வட்டாட்சியா்கள் பங்கேற்றனா்.

Tags:    

Similar News