மக்களுடன் முதல்வர் திட்டத்தில் கீழ் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார் முதல்வர்
சென்னையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணையை முதல்வர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் (16.2.2024) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 2058 முகாம்களில், 3.50 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, இத்திட்டத்தின் கீழ், பயனாளிக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான ராதாகிருஷ்ணன் முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.