வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறப்பு.

இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 12 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்

Update: 2024-02-27 15:57 GMT

மு.க. ஸ்டாலின் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 12 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 கோட்டாட்சியர் குடியிருப்புகள், 1 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், 1 வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, 4 வட்டாட்சியர் குடியிருப்புகள், 13 குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், 1 கிராம நிருவாக அலுவலகக் கட்டடம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் 3 கோடியே 6 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்; நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 3 கோடியே 44 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளிட்டவை தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
Tags:    

Similar News