அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க ஸ்டாலின்

Update: 2024-08-27 06:00 GMT
அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

  • whatsapp icon

உலக முதலீடுகளை ஈர்க்க இன்றிரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் செப் 2 ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் தங்கும் ஸ்டாலின் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் உலக முதலீட்டளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

அதன்பிறகுசிகாகோ செல்லும் ஸ்டாலின் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை தங்கி முன்னணி நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்கிறார். குறிப்பாக அங்கு, பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார்.

Tags:    

Similar News