வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேச தமிழர்களுக்கு உதவ முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

Update: 2024-07-20 09:39 GMT

மு.க. ஸ்டாலின் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. 

அந்நாட்டிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

Advertisement

வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் சொந்த நாட்டிற்கு திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,, தமிழ் மாணவர்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தை, வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News