வால்பாறை, பொள்ளாச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் !

Update: 2024-07-30 07:40 GMT

ஸ்டாலின் 

கோவை மாவட்டம், வால்பாறை, பொள்ளாச்சியில் ஏற்பட்ட இருவேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வால்பாறையில் நிலச்சரிவில் உயிரிழந்த ராஜேஸ்வரி, தனப்பிரியா குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொள்ளாச்சியில் வீடு இடிந்து உயிரிழந்த ஹரிஹரசுதன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News