முதல்வர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு!

தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் சென்று பொதுமக்களிடம் தீவிரமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-03-26 05:16 GMT

தூத்துக்குடி நாடாளுமன்ற மன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார் பின்னர் தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கறி சந்தையில் நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

பின்னர் வாகனம் மூலம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் வழியாக சென்று சாலைகளில் சென்றவர்களிடம் வாக்குகளை சேகரித்தார் இதனை தூத்துக்குடி லையன்ஸ் டவுண் பகுதியில் நடந்து வீதி வீதியாக சென்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிய முதல்வருக்கு நன்றி நன்றி என கோசமிட்டனர்.

அப்போது ஒருவர் கைக்குழந்தையை வைத்திருந்த குழந்தையை முதல்வர் வாங்கி கொஞ்சினார். தொடர்ந்து லயன்ஸ் டவுண் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்குள் திடிரெனெ சென்ற முதல்வர் அவர்களிடம் வாக்கு சேகரித்து அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேனிநீர் அருந்தினார் பின்னர் தூத்துக்குடி மாநகர பகுதி முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி தமிழக முதல்வர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் செல்பி எடுத்தும் கைகளை கொடுத்தும் மகிழ்ந்தனர். தமிழக முதல்வரின் இந்த வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News