காலை உணவு திட்டம் : முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாணவரின் தாய்

தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் 56,023 மாணவ மாணவிகள் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-05-15 09:08 GMT

தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்  கூறியதாவது,  தமிழ்நாடு முதலமைச்சரின் மகத்தான நல்வாழ்வுத் திட்டங்களின் வரிசையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நானிலம் போற்றும் திட்டமாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை பயிலும், 18.5 லட்சம் மாணாக்கர்கள் இத்திட்டத்தினால் பயனடைந்து வருகிறார்கள். முதலமைச்சரின் நல்லாட்சியில் சீர்மிகு இத்திட்டத்தை ஏனைய பிற மாநிலங்கள் மட்டுமின்றி, அயல்நாடான கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது வரலாற்றுச் சிறப்புகுரியதாகும்.தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், இத்திட்டத்தின் வாயிலாக 56,023 மாணாக்கர்கள் பயன்பெற்று வருகின்றனர்" என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

Advertisement

இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கதிரேசன் பெற்றோர் தெரிவித்ததாவது :- எனது பெயர் அஞ்சலை எனது மகன் கதிரேசன். தஞ்சாவூர் இராஜப்பா நகர் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். நான் தினமும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் வேலைக்குச் செல்ல காலதாமதம் ஆகிவிடும் என்பதால் காலை உணவினை வீட்டில் சமைப்பதில்லை. குழந்தைகள் பழைய உணவினை சாப்பிட்டு பள்ளிக்கு சென்று வந்தனர். இப்பொழுது தமிழக முதல்வர்  காலை உணவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்திய  பின்னர் என் குழந்தைகள் தினமும் காலை உணவினை பள்ளியில் சூடாக  சாப்பிடுகின்றனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பள்ளியில் காலை உணவு திட்டத்தினை அளித்த தமிழக முதல்வருக்கு இதயப்பூர்வமான நன்றிகள்" என்றார்.  இவ்வாறு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.



Tags:    

Similar News