சென்னை மாநகரில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு!

சென்னை மாநகரில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-25 16:27 GMT
சென்னை வேளச்சேரி, தொல்காப்பியர் பூங்கா, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை கட்டுமானம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தவர், சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய வளர்ச்சி பணிகள் குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன, சில பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. மணப்பாக்கம், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடையும். அடையாறு ஆற்றில் தண்ணீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். மாடர்ன் கழிப்பறை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். தொல்காப்பியர் பூங்காவில் மரு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் செய்ய நேரம் இது தான், டிசம்பர் மாத மழை, ஜனவரி மாத விழாக்கள் எல்லாம் முடிந்து பணிகள் நடந்து வருகின்றன. பருவமழை காலங்களில் சேதமடைந்த சாலைகள் டெண்டர் பணிகள் எல்லாம் முடிந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு மாதங்களில் தற்காலிகமாக சரி செய்யப்படும் பணிகள் முடிவடைந்துவிடும். பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் கொளப்பாக்கம் கெருகம்பாக்கம் ஆகிய மாநகரின் புறநகர் பகுதியில் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளின் தரம் , ஒப்பந்தத்தின் அடிப்படையில் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பருவ மழை காரணமாக சேதாரம் ஆகிய சாலைகள் தற்போது முழு வீச்சில் புனரமைப்பு செய்யப்படுகின்றன. ஓரிரு மாதங்களில் முழுமையாக பணிகளை நிறைவு பெரும் வண்ணம் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் முறையாக சாலை பணிகளை மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் சார்பில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. எவ்வளவு பணிகள் முடிந்துள்ளன என்பது குறித்து சரியாக சொல்வது கடினம், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள் மற்ற பணிகளும் முடிவடைந்து விடும் என்றார்.
Tags:    

Similar News