சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சேலம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் அருள் செல்வம் ராயப்பன் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்

Update: 2023-12-04 05:43 GMT

சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் நியூ பேர்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மற்றும் பப்ளிக் பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக சேலம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் அருள் செல்வம் ராயப்பன் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா அழைத்து வரப்பட்டு அனைவரையும் மகிழ்வித்தார். பின்னர் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாடகம், பாட்டுப்போட்டி நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஷெர்லி செபாஸ்டின், பப்ளிக் பள்ளி முதல்வர் ஜாய்சி அகஸ்டின், பள்ளி தாளாளர் சுஜிதா, ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News