கிறிஸ்துமஸ் : சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Update: 2023-12-22 01:39 GMT
சிறப்பு பேருந்துகள் 
வருகிற 25-ந்தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து 250 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, காஞ்சிபுரத்துக்கும் இயக்கப்படுகிறது. அதே போன்று ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மேட்டூருக்கும் இயக்கப்படுகிறது. மேலும் தேவைப்படும் போது அதிக பஸ்கள் இயக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரை இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News