பத்தாம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பலி

திருவேற்காடு அருகே ஏரியில் குளிக்க சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-02 16:46 GMT

நீரில் மூழ்கி பலி

சென்னையை அடுத்த திருவேற்காடு, மகாலட்சுமி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் 53 வயதான அறிவுடைநம்பி, இவரது 15 வயது மகன் தயாநிதி, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்த நிலையில் இன்று தயாநிதியும் அவரது நண்பர் 14 வயதான அம்ரித் என்பவரும் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர். தயாநிதி தெர்மாகோலை வைத்து அதனை பிடித்தவாறு ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென தெர்மாகோல் உடைந்து தயாநிதி நீரில் மூழ்கினார் . இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்ரித் கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் ஏரியில் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் நீரில் மூழ்கி கிடந்த தயாநிதி சடலத்தை மீட்டனர். இதையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தயாநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News