சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது அது இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-06 15:34 GMT
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பான வழக்குகள் முடித்துவைப்பு. சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சனாதானத்தை ஒழிக்க வேண்டும், அது கொரானா போன்றது என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, ஆ.ராசா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சனாதனம் குறித்து பேசியிருந்தனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் தனிப்பட்ட கருத்துகள் எதுவாக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு கீழ் அமைச்சர் போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சனாதனம் குறித்து பேசியிருக்க கூடாது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர், அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் ஆ.ராசாவிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை முடித்து வைத்து உத்தரவு.
Tags:    

Similar News