முதலமைச்சரும் திருமாவளவனும் திட்டமிட்டு மதுவிலக்கு குறித்த நாடகம்: எல்.முருகன்

முதலமைச்சரும் திருமாவளவனும் திட்டமிட்டு மதுவிலக்கு குறித்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-09-17 09:03 GMT
முதலமைச்சரும் திருமாவளவனும் திட்டமிட்டு மதுவிலக்கு குறித்த நாடகம்: எல்.முருகன்

மத்திய அமைச்சர் எல்.முருகன்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முதலமைச்சரும் திருமாவளவனும் திட்டமிட்டு மதுவிலக்கு குறித்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரும் திருமாவளவனும் திட்டமிட்டு மதுவிலக்கு குறித்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் தோல்வியை மறைக்கவும், அமெரிக்க பயணத்தை பற்றி மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவும் திருமாவளவன், முதலமைச்சர் இணைந்து நாடகம் நடத்தி உள்ளனர். முதலமைச்சரின் தூண்டுதலில் மது ஒழிப்பு குறித்து திருமாவளவன் பேசி மக்களை திசை திருப்புகிறார். தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாத நடிகர் விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News