”உங்களுக்கும் இதே கதி வரும்” - பிரதமர் மோடியை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநிலங்கள் இருப்பதும், அதை முதலமைச்சர்கள் ஆள்வதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை.

Update: 2024-02-08 12:47 GMT

cm stalin, pm modi

மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு நாளை ”உங்களுக்கும் இதே கதி வரும் என்பதை எச்சரிக்கையாக சொல்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்து”உங்களுக்கும் இதே கதி வரும்” - பிரதமர் மோடியை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் கேரளாவை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய அரசின் பராபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கவில்லை என்றும் கூறி டெல்லியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசினார்.

அதில், ” கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை( பினராயி விஜயன்) டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்த வேண்டிய மிகவும் மோசமான ஒரு அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுகிறேன். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளார். இன்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்லது. நிதி பங்கீடு விவகாரத்தில் மாநிலங்கள் போராட்டம் நடத்து சூழலுக்கு மத்திய அரசு தள்ளியுள்ளது. மத்திய பாஜக அரசுக்கு, மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

சமூக நீதி காவலர் வி.சி. சிங் பிரதமராக இருந்த போது கலைஞரிடம் ஒரு கருத்தை கூறினார். அதாவது. "தமிழகத்தின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட டெல்லிக்கு வர தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழகத்தில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றி தருவேன்" என்று கூறினார். மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார். மாநிலங்கள் இருப்பதும், அதை முதலமைச்சர்கள் ஆள்வதும் பிரதமருக்கு பிடிக்கவில்லை. ஆனால், அவர் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து பிரதமரானவர்.

பிரதமர் ஆனதும் முதல் வேலையாக மாநிலங்களின் உரிமையை பறித்துள்ளார். நிதி உரிமையை பறிக்கிறார். எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி உரிமை கொடுப்பதில்லை. நாளை உங்கள் ( பாஜக ஆளும்) மாநிலங்களுக்கும் இதே கதி தான் வரும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். பாஜக அரசின் எதேச்சாதிகார நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு உறுதியோடு போராட்டி வரும். ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்ததற்கு பிறகு மாநில அரசுகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய மத்திய அரசு, மாநில அரசின் நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

’இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து ஒற்றுமை மூலம், இந்திய அரசை கைப்பற்றி, பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என பேசியுள்ளார். 

Tags:    

Similar News