ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பில் 559 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ஈரோடு தமிழகத்தில் புதிய வரலாற்றிற்கான தொடக்கம். வளர்ச்சி நிறைந்த தமிழகத்திற்கு காரணமான பெரியார், அண்ணா, கலைஞரை தந்த மண் ஈரோடு. வைக்கம் போராட்டத்தில் பெரியார் போட்ட அடித்தளத்தால் கேரள மக்கள் தமிழகத்தை பாராட்டுகின்றனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்த சோகம் எனக்குள் இருக்கிறது. தந்தை பெரியாரின் பேரசன் இளங்கோவனின் இழப்பு தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. பரபரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நினைத்த செயலை வெற்றிகரமாக நிகழ்த்தக் கூடியவர் அமைச்சர் முத்துசாமி. ஈரோடு மாவட்டத்திற்கு தமிழக அரசு செய்துள்ள பணிகள் மிக பெரியது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி வைத்தோம். தந்தை பெரியார் மருத்துவமனையில் பல்நோக்கு மலுத்துவமனை கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. பவானி சாகரில் ஐயா ஈஸ்வரன் நினைவு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும். பால்வள தந்தை பரமசிவத்தின் முழு உருவ சிலை பால் பண்ணையில் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார்.