ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்

ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-09-26 07:18 GMT
ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது! என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News