திருவள்ளூரில் சேவல் சண்டை போட்டி

திருவள்ளூரில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.

Update: 2024-01-27 15:54 GMT

சேவல் சண்டையில் கலந்து கொண்ட சேவல்கள்

திருவள்ளூர்- வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டிக்கு தயாரான திருவள்ளூர் மாவட்டம் பிரசிதி பெற்ற தங்கானூர் ஒரே நேரத்தில் 1000 சேவல்கள் களத்தில் களம் காண தயார் நிலை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள சண்டை சேவல் இனத்தை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளூர் மாவட்டம் தங்கானூர் கிராமத்தில் நீதிமன்ற அனுமதியுடன் சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு சேவல் சண்டைக்கு பிரசித்தி பெற்ற தங்கனூர் கிராமத்தில் தைப்பூசம் முன்னிட்டு வருகின்ற 27,28 ஆகிய இரண்டு தினங்களில் காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை சேவல் சண்டை போட்டி நடத்த கட்டுப்பாடுகள் உடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதில் சேவல்கள் காலில் கத்திகள் கட்டுவதும் மதுபானம் ஊற்றுவதும் சாதி மாதம் பெயரை வைத்து அழைக்க கூடது என நீதி மன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் சேவல்களுக்கு கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தும் போலீசார் பாதுகாப்பு அளித்தும் கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுரைத்துள்ளதை தொடர்ந்து,

போட்டியில் களம் காண உள்ள சேவல்களுக்கு கடந்த 20 நாட்களாக காலை மாலை என தங்கானூர் பகுதியில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டு வருகிறது. போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா கேரளா புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சண்டை சேவல்கள் பங்கேற்க உள்ளதால் 1000 சேவல்கள் ஒரே நேரத்தில் களம் காணும் வகையில் இடம் தயர்நிலை செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் வெற்றி பெறும் சேவல்களுக்கு தங்க மெடல் மற்றும் சான்றிதழ் முதல் மூன்று இடத்தில் பிடிக்கும் சேவல்களுக்கு கேஸ் ஸ்டவ் அடுப்புகள் பரிசுகள் அளிக்க விழா கமிட்டி முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News