நியாய விலை கடையில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்: போராட்டம்
நியாய விலை கடையில் பாமயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் ராணிப்பேட்டை மாவட்ட விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் தமிழக அரசின் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் கடலைஎண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும்.
அதேபோல் மலேசியா, இந்தோனேசியா பாமாயிலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். தேங்காய், நிலக்கடலை போன்ற பயிர்களை விவசாயம் செய்யும் விவசாயிகள் தற்கொலைக்கு செல்லும் நிலை உள்ளது. ஆனால் தமிழக அரசு நியாய விலை கடைகளில் மலேசியா இந்தோனேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பனை செய்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
அதேபோல் பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டம் உண்ணாவிரதம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனை ரத்து செய்து தமிழ்நாட்டில் தேங்காய் நிலக்கடலை மற்றும் எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் நெமிலி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதது.