கோவை : யானை தாக்கி முதியவர் பலி
போளுவாம்பட்டி அருகே நரசீபுரம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற முதியவரை காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை:கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.யானைகள் ஊருக்குள் வருவதை கட்டுபடுத்த வனத்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகம் நரசீபுரம் ரங்கநாதன் பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள பெரியசாமி தோட்டம் களத்துக்காடு பகுதியில் இன்று காலை விராலியூர் இந்திரா காலனியைச் சார்ந்த சின்னக்குட்டி(73) என்பவர் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.அப்போது அங்கு இருந்த வந்த ஒற்றை காட்டு யானை சின்னக்குட்டியை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து வனப்பணியாளர்களுக்கு தகவல் கிடைக்கு பெற்றதை தொடர்ந்து அங்கு சென்ற வனப்பணியாளர்கள் அவரை பரிசோதித்தபோது யானை தாக்கியதில் அவர் உயிர் இழந்தது தெரியவந்தது.இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஆம்புலன்ஸில் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.