வாலாஜாவில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
வலாஜாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டவரும் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருமான வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் கீதா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.