வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2024-04-30 02:51 GMT

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் திடீரென ஆய்வு செய்தார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்காக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு. காட்பாடி, திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இங்குள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடத்தில் தரைத்தளத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும், முதல் தளத்தில் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இரண்டாம் தளத்தில் திருத்தணி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரியின் வலது புறத்தில் உள்ள 30 வகுப்பறை கொண்ட கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, முதல் தளத்தில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி, இரண்டாம் தளத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வளர்மதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News