கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிப் பயணம்
ஆதிச்சநல்லூர் பகுதிக்கு கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் சேக் முகைதீன் பாதுஷா ஏற்பாடு செய்திருந்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-01-29 04:48 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதிக்கு கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டனர். பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப மன்றம் ஆகியவை இணைந்து நடத்தும் இளம் மாணவ விஞ்ஞானி திட்டத்தில் 15 நாட்களாக பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்லூரி பேராசிரியர்களோடு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பகுதிக்கு ஒரு நாள் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் சேக் முகைதீன் பாதுஷா ஏற்பாடு செய்திருந்தார். கல்லூரி வரலாற்று துறைப் பேராசிரியர் அப்துல் அஜீஸ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதிச்சநல்லூர் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் நோக்க உரையாற்றிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தன்னுடைய உரையில் இந்த அகழ்வாராய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதிய பொருட்களான முதுமக்கள் பயன்படுத்திய தங்கம், இரும்பு மற்றும் பழங்கால நாணயங்களை பற்றிய செய்திகளையும் எடுத்துரைத்தார். தொல்லியல் ஆய்வாளர் எதிஸ்குமார் சிறப்புரையாற்றினார். கருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) கந்தசுப்பு, கல்லூரியின் கலைப்புல முதன்மைர் முகம்மது ஹனீப், திட்டத்தின் துணை ஒருங்கிணைப்பாளர்களான விலங்கியல் துறை பேராசிரியர் ஜாகிர் உசேன், முகைதீன், கணிதத்துறை பேராசிரியர் முகம்மது ரில்வான், நுண்ணுயிர் துறை பேராசிரியர் ஷெரீப், தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் யூனுஸ் மற்றும் உணவு ஊட்டச்சத்து துறை பேராசிரியை மெர்லின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.