கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பிரச்சாரம்!

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-03 05:10 GMT

கம்யூனிஸ்ட் கட்சி

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேலூர் பாகாயம், ஓட்டேரி, விருப்பாச்சிபுரம், பலவஞ்சாத்து குப்பம், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் எம்எல்ஏ லதா உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பலர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர் சந்திப்பின் போது முத்தரசன் பேசுகையில்," ஸ்டேட் வங்கி, நீதிமன்றம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முடுக்கி விடப்படுகிறது. கட்சிகளுக்கு அபராதம் விதித்து அவைகளை முடக்கி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று ஒரே உணவு, கடைசியில் ஒரே கட்சி என்பார்கள்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் 2-வது சுதந்திர போராட்டம் போன்றது. பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும். எடப் பாடி பழனிசாமி எங்களுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார். ஆனால் நாகை மீனவர் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் கவர்னருக்கு அனுப்பி அதனை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார்.

ஆனால் ஜனாதிபதி, மத்திய அரசு ஜெயலலிதா பெயரை சூட்ட முடியாது என பதிலளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஜெயல லிதா பெயரை மீனவர் பல்கலைகழகத்திற்கு வைக்க முடியாது என்பதை கண்டிக்கவும் இல்லை. ஒன்று கள்ள கூட்டணி. மற்றொன்று நள்ளிரவு கூட்டணி என கூறினார்.

Tags:    

Similar News