கடந்தாண்டை விட ரூ. 1,734 கோடியே 54 லட்சத்துக்கு கூடுதல் மது விற்பனை

கடந்த நிதியாண்டை விட இந்தாண்டில் ரூ. ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு, ஆயர்த்தீர்வை துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-06-21 16:17 GMT

கடந்த நிதியாண்டை விட இந்தாண்டில் ரூ. ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை தெரிவித்துள்ளது.  

கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 2023- 24 ஆம் நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் 1,734 கோடியே 54 லட்சம் ரூபாய் அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் , திருவள்ளுவர் தினம் , குடியரசு தினம் , மகாவீர் ஜெயந்தி , வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் , மே தினம் , சுதந்திர தினம் , நபிகள் நாயகம் பிறந்த நாள் , காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் தவிர இதர நாட்களில் இயங்கியதன் மூலம் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டை விட இந்த ஆண்டு ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாக கொள்ளை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News