விசிக 5 மாநிலங்களில் போட்டி!

Update: 2024-02-20 09:18 GMT

திருமாவளவன்

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை பல்வேறு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மேலும் இந்தியா கூட்டணியில் போட்டியிடுகிறது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது' " ஐந்து மாநிலங்களில் விசிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளோம். தமிழ்நாடு ஆந்திரா கேரளா தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் போட்டியிட உள்ளோம். மேலும் விசிக கட்சிக்கு பானை சின்னத்தை ஒரு சின்னமாக ஒதுக்க டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை கைவிட கோரி கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்." எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News