ரயிலில் வைத்து மாணவனை தாக்கியதாக பயிற்சியாளர் மீது புகார்

தேசிய அளவிலான போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று திரும்பிய மாணவனை ரயிலில் வைத்து 2 நாட்கள் உணவு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தியதாக பயிற்சியாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2024-02-16 09:46 GMT

தாக்கப்பட்ட மாணவன் 

தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவன் டேக்வாண்டோவில் ஆர்வம் கொண்டு விளையாடி வருகிறார். இவர் தூத்துக்குடியை சேர்ந்த வின்னர் டேக்வாண்டோ தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வரும் பயிற்சியாளர் ராமலிங்க பாரதி என்பவரிடம் பயிற்சி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மாணவனை, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி விடுதியில் சேர்த்துள்ளனர். அங்கு அந்த மாணவன் டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருவதுடன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த பத்தாம் தேதி இரவு டெல்லி ரயில் நிலையம் சென்று அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார்.  மாணவருடன் பயிற்சியாளராக ராமலிங்க பாரதி மற்றும் மற்றொரு பயிற்சியாளர் சர்மா ஆகியோர் சென்றுள்ளனர். ரயிலில் வருவதற்காக மற்றும் உணவுக்காக ரூ.15,000 ரிஷிகேசன் பெற்றோர் பயிற்சியாளர் ராமலிங்க பாரதிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரயிலில் வரும் பொழுது அந்த மாணவன், பயிற்சியாளர் ராமலிங்க பாரதியிடம் உணவு கேட்டுள்ளார். அவர் உணவு வாங்கி கொடுக்காமல், நான் தேவைப்படும்போது உணவு வாங்கி தருவேன் நாய் மாதிரி இருக்க வேண்டும் நான் வழங்கும் சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார் மேலும், மறுநாளும் அவர் உணவு கொடுக்காமல் அவரது கழுத்துப் பகுதி தலை கால் உள்ளிட்டவற்றில் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாமல் செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காயம் அடைந்த மாணவன் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி  காவல் நிலையத்திலும் ரயில்வே போலீசாரிடமும் மாணவரின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News