அதிமுக தரப்பில் அளித்த புகார்: தேர்தல் அதிகாரி மாலைக்குள் விளக்கம்
அதிமுக தரப்பில் தரப்பட்ட 9 புகார் மனுக்களுக்கு இன்று மாலைக்குள்ளாக விளக்கத்தை தருவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபுமுருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தி.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் பல தேர்தலில் வாக்களித்த 528 வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகார் மனுவை தமிழக தேர்தல் ஆணையத்திடம் தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகி சத்யா ஏற்கனவே வழங்கி இருந்தார். தொ
குதிக்கு சம்பந்தமில்லாத 560 பேரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது அதை நீக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை, எனவே அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம். அதிமுகவுக்கு சாதகமாக இருப்பவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது,
இது மிகப்பெரிய ஜனநாயக விதிமுறை மீறல், ஜனநாயக படுகொலை. அடையாள அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பை தேர்தல் ஆணையம் அமைத்து தர வேண்டும். வாக்காளர் சரிபார்ப்பு முகாம் கடைசி தேதி முடிவடைவதற்கு முன்பே புகார் கொடுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நிறைவடைந்த பின்னர் வாக்களிப்பதற்கு தகுதி உடையவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக அதிகாரம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உண்டு.
இதுவரை 9 புகார் மனுக்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கி இருக்கிறோம் அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி, எம் ஆர் கே பன்னீர்செல்வம் , மற்றும் உதயநிதி மீதும் புகார் கொடுத்திருக்கிறோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று மாலைக்குள்ளாக இதற்கான விளக்கத்தை தருவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். கருணாநிதி நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒளிபரப்பப்படும் ஒலி, ஒளி காட்சி ரத்து செய்வது குறித்து புகார் கொடுத்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதனைகள் கூறி பிரச்சாரம் செய்யாமல் எதிர்கட்சி தலைவரை விமர்சித்து உருவ கேலி செய்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்,
இது நாகரிகமான அரசியல் இல்லை, உதயநிதி கருணாநிதி பேரன் என்பதற்கு உண்டான தகுதியை இழந்து விட்டார். தாத்தா போல பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தேன் என்று நிரூபிக்க வேண்டிய நேரத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.