பூரண மதுவிலக்கு என்பதே தீர்வு- திருமாவளவன் எம் பி
நச்சு சாராய சாவுகளால் ஏற்படுகிற பாதிப்பை விட, சட்டபூர்வமாக அரசு விற்பனை செய்கிற மதுபானங்கள் மனித வளத்தை பெருமளவில் சேதப்படுத்துகிறது. மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால் பூரண மது விலக்கு என்பதே தீர்வு என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மேலவளவில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அக்கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற அறப்போரில் முருகேசன் உட்பட ஏழு பேர் மேலவளவில் பலியான சம்பவத்திற்கு நினைவு தினம் இன்று. பலியானவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி போதிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலவளவில் ஊராட்சி தலைவராக தலித் வந்ததால் 1997ல் படுகொலை நடந்தது. அப்போதைய அரசு அதற்கு இழப்பீடு வழங்கவில்லை. தற்போது வரை நிலுவையில் உள்ளது இன்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து நான்காம் தேதி ஐந்தாம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறோம் நான் இரண்டு நாட்கள் அந்த வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளேன். விச சாராய உயிரிழப்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
இதற்கு முழு மதுவிலக்கு ஒன்று தான் தீர்வு. அரசு மதுபானம் என்பது தீர்வாக இருக்க முடியாது நச்சு சாராய சாவுகளால் ஏற்படுகிற பாதிப்பை விட சட்டபூர்வமாக அரசு விற்பனை செய்கிற மதுபானங்கள் மனித வளத்தை பெருமளவில் சேதப்படுத்துகிறது. இளம் தலைமுறையினர் ஆற்றல் இழந்து பாலாகி வருகின்றனர். இதனால் ஏற்படுகிற பாதிப்பு தேசத்திற்கு பேரு இழப்பு என்பதை அரசு உணர வேண்டும் ஆகவே மாநில அரசு மட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசும் மதுவிலக்கு கொள்கை பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் அப்போதுதான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க முடியும்.
மெத்தானால் என்கிற நச்சு ஆல்கஹால் கள்ளச் சந்தையில் புழக்கத்தில் உள்ளது அதற்கு பின்னால் ஒரு கும்பல் இயங்குகிறது அந்த மாபியா கும்பல் யார் என்பதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். கள்ளச்சாராயம் விற்ற ஓர் இருவரை கைது செய்வது கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது போதுமான நடவடிக்கை அல்ல மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான் ஆனால் பூரண மது விலக்கை நடைமுறை படுத்த முதலமைச்சர் முன்வர வேண்டும் அது திமுகவிற்கு திமுகவின் எதிர்காலத்திற்கு பெரிய அளவிலே வெகு மக்களுடைய செல்வாக்கை பெருக்கும் குறிப்பாக தாய்மார்கள் பெரிய நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள்.
கள்ளக்குறிச்சியில் நான் சென்று மக்களிடம் கேட்டபோது கள்ளச்சாராயத்தை ஒழியுங்கள் என்று மக்கள் கூறவில்லை அரசு மதுபான கடைகளை மூடுங்கள் என்று தான் அவர்கள் கோரிக்கையாக உள்ளது என்றார். அரசு மதுபான கடைகளை படிப்படியாக மூட வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம் பல லட்சம் பேர் பங்கேற்கும் மாநாடாக அது அமையும். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. தவறான செய்திகளை குடியரசுத் தலைவரை பதிவு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது அவர்கள் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு.
கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63.இடங்கள் குறைவு. ஆயோத்தி கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்து உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒரு தலைபட்சமாக சார்பாக செயல்படுகிறார். நடிகர் விஜய் மாணவர்களிடம் பேசியதில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முறையாகவே நான் பார்க்கிறேன் அதில் பிழையும் உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை அதில் பிழையும் உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியது மாணவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும் கூறியதாகவே நான் கருதுகிறேன். சிவகாசி வெடி விபத்தில் இறந்த நான்கு குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்
தமிழக முதல்வர் அதை பரிசளிக்க வேண்டும். காந்தியடிகள் கல்லு உட்பட எந்த மதுவும் கூடாது என்று தான் வலியுறுத்தினார் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் முழு மதுவிலக்கை வலியுறுத்த வேண்டும் என்பது தான் காந்திக்கு செலுத்துகிற நன்றி கடன் ஆகிட முடியும் கள்ளுக்கடையை திறப்பது கோரிக்கையாக தமிழ்நாட்டிலே கல் உற்பத்தியாளர்கள் தரப்பு வைக்கப்படுகிறது முதலில் அரசு மதுபான கடைகளை அரசு மூட வேண்டும் அதுவே முதன்மையான கோரிக்கை. ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காவல் துறையில் தனி உளவு பிரிவு தொடங்க வேண்டும். ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ராகுல் காந்தியின் மைக் ஆப் செய்தது வழக்கமான ஒன்றுதான் வாடிக்கையான ஒன்றுதான் என்று கூறினார்.