தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலாளரின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.;

Update: 2024-05-14 03:16 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்

பைல் படம்

  • whatsapp icon

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. எனது தனிச் செயலாளர் திரு. ஆர். தினேஷ்குமார் அவர்களது தந்தையார் - நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்த திரு. டி.வி. ரவி அவர்கள் நேற்று இரவு (12-04-2024) மறைவெய்திய செய்தியால் வேதனையடைந்தேன். தன்னை வளர்த்து, சான்றோனாக்கிய தந்தையை இழந்து தவிப்பது எந்தவொரு மகனுக்கும் எளிதில் ஆற்றிவிட முடியாத துயரமும், ஈடு செய்துவிட முடியாத இழப்புமாகும்.

உயிர்கொடுத்து, உற்றதுணையாய் விளங்கிய தந்தையை இழந்து தவிக்கும் தினேஷ்குமார் அவர்களின் துயரைப் பகிர்ந்துகொள்கிறேன். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags:    

Similar News