உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 230 தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி அரியலூர் ஆர்டிஓ விடம் ஒப்படைத்தனர்.;
Update: 2024-04-10 00:58 GMT
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்
அரியலூர் பறக்கும் படை குழுவினர் வட்டாட்சியர் சுசீலா தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர் தமிழரசி போலீசார் முஹம்மது ஆசிப் அடங்கிய குழுவினர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள அகரம் கிராமத்தில் சோதனையின் போது அரியலூர் வட்டம் , சென்னிவனம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் .இளவரசன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ 1,34, 230- (ஒரு லட்சத்து முப்பத்து நான்கு ஆயிரத்து இருநூற்று முப்பது) ஐ தேர்தல் பறக்கும் படை குழுவினர் கைப்பற்றி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் அரியலூர் ஆர்டிஓ ராமகிருஷ்ணன் வசம் ஒப்படைத்தனர்.