'கொலை மிரட்டல்', 'மரண வாக்குமூலம்' , 'இவர்கள்தான் காரணம்' - சடலமான காங்கிரஸ் நிர்வாகி !

Update: 2024-05-04 09:13 GMT

ஜெயக்குமார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார். இவர் பல்வேறு கட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றி தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். ஏற்கனவே உட் கட்சி பூசல்கள் இருந்த நிலையில் தேர்தலின் போது மூத்த தலைவர்களின் அறிவுறுத்தலின்படி தேர்தல் பணிகள் நடைபெற்றன.

தேர்தலுக்குப் பிறகு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.

இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளர்.

இதனை அடுத்து கடந்த 2 ஆம் தேதி இரவு 7:45 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற அவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரது மகன் கருத்தையா ஜாஃபரின் நேற்று மாலை நெல்லை மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கே.பி ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் காவல்துறைக்கு எழுதிய பரபரப்பான புகார் கடிதம் வெளியானது.

அக்கடிதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் என பலரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல லட்சங்களை செலவு செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னிடம் ஆகிய பணத்துக்காக நிலத்தை எழுதிக் கொடுத்த ஒருவரும் மும்பை ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் ஜெயக்குமார் அளித்த புகாரியில் மிரட்டல் விடுத்த நபர்களின் பெயர்களோடு தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு மரணவாக்கு மூலம் என எழுதியுள்ளார்.

இது குறித்து போலீசார் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சி பகையால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்க ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது, நெல்லையில் ராகுல் காந்தி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய காட்டியவர் ஜெயக்குமார். நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். நெல்லைக்கு சென்று விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறேன். " எனக்கு கூறினார்

Tags:    

Similar News