பா.ஜக.வில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார்.;
Update: 2024-02-24 19:51 GMT
விஜயதாரணி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகியாகவும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாகவும் இருந்தவர் விஜயதரணி. கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி விஜயதரணி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தார்.