தனக்கு வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கு மனமார்ந்த நன்றி

இத்தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Update: 2024-04-01 01:32 GMT

திருநாவுக்கரசர் 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மட்டும் பொது மக்களுக்கு திருநாவுக்கரசு ஒன்றும் செய்யவில்லை என கூறி காங்கிரஸ் நிர்வாகிகளே திருநாவுக்கரசருக்கு மீண்டும் திருச்சியில் போட்டியிட கூடாது என காங்கிரஸ் தலைமைக்கு கடிதங்கள் அனுப்பினர். மேலும் அவருக்கு சீட்டு பல எதிர்ப்புகள் இருந்த நிலையில் அவருக்கு திருச்சியில் மட்டுமல்ல எங்கேயுமே போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை .

இந்நிலையில் தனக்கு வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் கடும் விரக்தியில் புலம்பியுள்ளார் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியை மையமாகக் கொண்டு தனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தனக்குள்ள மத்திய, மாநில அரசுகளின் தொடர்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிந்த நன்மைகளை மக்களுக்கு தொடர்ந்து செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்

. “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என்றும் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். விஜயதாரணியை தொடர்ந்து திருநாவுக்கரசர் பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியானது. அந்த தகவலை மறுத்திருந்த நிலையில், தற்போது உட்கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் திருநாவுக்கரசர் அதிருப்தியில் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து திருநாவுக்கரசர் அடுத்த அதிரடி முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்

Tags:    

Similar News