தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
வட மாநில தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், இந்திய கூட்டணியை பலப்படுத்த தமீமுன்அன்சாரி கோரிக்கை;
தமீமுன் அன்சாரி
மனித நேய ஜனநாயக கட்சியின் ,மாநில செயலாளர், தமீமுன் அன்சாரி,மயிலாடுதுறை அருகே நடைபெற்ற, ஒரு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ,செய்தியாளர்களை சந்தித்த போது , நடந்து முடிந்த, வட மாநில தேர்தலில், காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் தோல்வியை தழுவியது கவலை அளிக்கிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு, ஒரு சில இடங்களை கொடுத்து அரவணைத்து தேர்தலை சந்தித்து இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி கிடைத்திருக்காது. காங்கிரஸ் தோல்வி அடைந்த இடங்களில், ஆயிரம் வாக்குகள், 2ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் தோற்றுள்ளது. நான்கு மாநில தேர்தலுக்கு முன்பே, பல அரசியல் கட்சியினர், கூறிய கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை. ஆகவே, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், இந்தியா கூட்டணியை, பலம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என்றார்.