புதிய பூங்கா அமைப்பதற்கான பணி: எம்எல்ஏ தொடங்கி வைப்பு
கோயம்பேடு மலர் அங்காடியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றையும் (Fountain) திறந்து வைத்தார்;
சென்னை, கோயம்பேடு மலர் அங்காடியில், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, ஆகியோர் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கோயம்பேடு மலர் அங்காடியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றை (Fountain) திறந்து, 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய புதிய பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோயம்பேடு தலைமை நிர்வாக அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கண்காணிப்பு பொறியாளர் ராஜ மகேஷ்குமார், கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ராமையா, ஜெயவீரன், மாரிமுத்து, மாமன்ற உறுப்பினர் லோகு ஆகியோர் கலந்து கொண்டனர்.