ரூ.12.41 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

ரூ.12.41 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேயர் தொடங்கி வைத்தார்

Update: 2023-12-16 11:36 GMT

பணிகளை தொடக்கி வைத்த மேயர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாநகராட்சி 17-வது வார்டில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தில் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் ஓமலூர் பிரதான சாலையில் வடபுறம் அர்த்தனாரி சந்திப்பு முதல் ஜூகா ஓட்டல் ஓடை கால்வாய் சந்திப்பு வரை 240 மீ நீளத்திற்கும், ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் பெங்களூர் ஆட்டோ மொபைல்ஸ் முதல் எல்.ஐ.சி. காலனி சந்திப்பு வரை 160 மீ. நீளத்திற்கும்,

ரூ.1 கோடியை 50 லட்சம் மதிப்பீட்டில் பிருந்தாவன் சாலை சந்திப்பு முதல் டி.வி.எஸ் கால்வாய் சந்திப்பு வரை 250 மீ. நீளத்திற்கும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மேலும், மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் முதல் மத்திய பஸ் நிலையம் ஆலமரத்து காடு வழியாக பள்ளப்பட்டி ஏரிக்கு செல்லும் ஓடை வரை 1600 மீ. நீளத்திற்கும், ரூ.51.20 லட்சம் மதிப்பீட்டில் 16-வது வார்டில் மார்கபந்து சாலை கோவிந்தகவுண்டர் தோட்டம் சந்திப்பு முதல் ஓமலூர் சாலை வரை 250 மீ. நீளத்திற்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 5 இடங்களில் மொத்தம் ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வசந்தா, ராஜேஸ்வரி தினகரன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் சுரேஷ், சுபாஷ்சுந்தர், சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News