மாநகராட்சி 3-வது வார்டில் துணை நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டும் பணி
மேயர் சுகாதார நிலையம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்;
Update: 2023-12-12 02:39 GMT
மாநகராட்சி ௩ வது வார்டில் துணை நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டும் பணி
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 3-வது வார்டு ரெட்டியூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காமிநாயக்கன்பட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ரூ.60 லட்சத்தில் கூடுதல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும், சிவதாபுரத்தில் ரூ.30 லட்சத்தில் துணை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும், முல்லை நகரில் ரூ.30 லட்சத்தில் துணை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும், திருவாக்கவுண்டனூர் விநாயகர் கோவில் அருகே ரூ.30 லட்சத்தில் துணை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும், செவ்வாய்பேட்டை போலீஸ் பேட்டரல் சாலையில் ரூ.60 லட்சத்தில் நகர்ப்புற சுகாதார நல மையத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர் குமரவேல், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, காவியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.