அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஓரிரு நாட்களுக்குள் ஆலோசனை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஓரிரு நாட்களுக்குள் ஆலோசனை நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Update: 2024-03-21 05:01 GMT

சத்யபிரதா சாகு 

வரும் 22 அல்லது 23 ஆம் தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை, காவல் துறையிடம் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறுவதால் தமிழக காவல்துறை தேர்தல் விதிமுறைகள் படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கீழ் செயல்படும். என்றார்.

Tags:    

Similar News